40 ஆண்டுகளுக்கு முன்பே புகையிலையின் தீமை குறித்து என்னை எச்சரித்து இருக்கலாம் சரத்பவார் உருக்கம்
40 ஆண்டுகளுக்கு முன்பாக யாராவது தனக்கு புகையிலையின் தீய விளைவுகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என சரத் பவார் உருக்கமாக கூறினார்.
மும்பை,

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் மும்பையில் இந்திய பல்மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற உலக வாய் ஆரோக்கிய தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது 2022-க்குள் நாட்டிலிருந்து வாய்ப்புற்றுநோயை முழுமையாக ஒழிப்பதற்கான செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
சரத்பவார் புகையிலை பயன்பாட்டால் வாய்ப்புற்று நோய்க்கு ஆளாகி தீவிர சிகிச்சைக்குப்பின் அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதுகுறித்து பேசியபோது, தனக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பாக புகையிலையின் தீய விளைவுகள் குறித்து யாராவது எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என உருக்கமாக தெரிவித்தார்.
பற்களை இழந்தேன்
மேலும் வாய்ப்புற்று நோயின் போது தனக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் சில பற்களை இழந்ததாகவும், இன்னமும் கூட தனது வாயை அகலமாக திறந்து உணவு சாப்பிட சிரமப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து வாலிபர்கள் பலர் புகையிலையின் பிடியில் சிக்குவது குறித்து வேதனை தெரிவித்த சரத்பவார் இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன் என உறுதியளித்தார்.

Related Tags :
Next Story