பெண் போலீசை தாக்கிய தம்பதிக்கு ஓராண்டு ஜெயில் கீழ்கோர்ட்டு தீர்ப்பை செசன்ஸ் கோர்ட்டு உறுதி செய்தது
பெண் போலீசை தாக்கிய தம்பதிக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வழங்கிய ஓராண்டு ஜெயில் தண்டனையை செசன்ஸ் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பளித்தது.
மும்பை,

பெண் போலீஸ் மீது தாக்குதல்
மும்பை சிவ்ரி பகுதியை சேர்ந்தவர் சோபா(வயது30). இவரது கணவர் ரமேஷ் (35). இந்த தம்பதியினர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மஜ்காவ் பகுதியில் உள்ள பாவுச்சா தக்கா கடற்கரைக்கு சென்றனர். அப்போது கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் சோபாவை கடற்கரையில் இருந்து சற்று தள்ளி நிற்குமாறு கூறினார். அப்போது பெண் போலீசாருக்கும், சோபாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சோபா கணவருடன் சேர்ந்து பெண் போலீசாரை அடித்து உதைத்து, கடித்து வைத்தார்.
ஓராண்டு ஜெயில்
இந்த சம்பவம் குறித்து போலீசார் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தம்பதிக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து தம்பதியினர் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கீழ் கோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்து, தம்பதிக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story