கல்வி மந்திரி வீட்டின் முன் ஆசிரியர்கள் கருப்பு ‘குடி' ஏந்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே வீட்டு முன் கருப்பு ‘குடி' ஏந்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,

ஆசிரியர்கள் போராட்டம்
மும்பையில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மாத சம்பளம் மிகவும் தாமதமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று மராட்டிய ராஜ்ய சிக்்ஷக் பரிசத் அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் நேற்று வில்லேபார்லேயில் உள்ள மந்திரி வினோத் தாவ்டே வீட்டு முன் திரண்டு போராட்டம் செய்தனர்.
நேற்று மராத்தி புத்தாண்டு குடிபட்வா கொண்டாடப்பட்ட நிலையில், வளத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருவதாக கருதப்படும் மஞ்சள் மற்றும் காவி நிற துணிகளை கொண்ட ‘குடி'களை மராட்டிய மக்கள் தங்கள் வீடுகளில் ஏற்றினார்கள்.
கருப்பு ‘குடி’
அதே நேரத்தில் மந்திரி வினோத் தாவ்டே வீட்டு முன் போராடிய ஆசிரியர்கள் தங்கள் கைகளில் கருப்பு குடிகளை ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் குறித்து மராட்டிய ராஜ்ய சிக்்ஷக்் பரிசத் அமைப்பின் மும்பை தலைவர் அனில் போர்னரே கூறுகையில், ‘‘மும்பையில் 27 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மாநில அரசின் தவறான கொள்கையால் ஆசிரியர்களுக்கு சம்பளம் மிகவும் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையை மாற்ற வலியுறுத்தி, கல்வித்துறை மந்திரியின் கவனத்தை ஈர்க்கவே அவரது வீட்டு முன் கருப்பு குடிகளை ஏந்தி போராடினோம்’’ என்றார்.

Related Tags :
Next Story