டி.வி. ரிமோட்டை சகோதரர் பிடுங்கியதால் தகராறு: மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
டி.வி. ரிமோட்டை சகோதரர் பிடுங்கியதால் ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தானே,

இளம்பெண்
தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த இளம்பெண் சோனாலி(வயது19). இவர் தனது சகோதரர் ஆகாஷ் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சோனாலி டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆகாஷ் சகோதரி வைத்திருந்த டி.வி.யின் ரிமோட்டை பிடுங்கி உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரம் அடைந்த ஆகாஷ் சகோதரி சோனாலியை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சோனாலி தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் வெகுநேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த சோனாலியின் பெற்றோர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் கலக்கம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, சோனாலி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோனாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story