மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க கோரிக்கை
மாவட்டத்தில் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, பூலான்குறிச்சி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருபாலரும் படிக்கும் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கையில் மகளிர் அரசு கலைக்கல்லூரி என 4 அரசு கலைக்கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சில தனியார் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மட்டுமே பல்வேறு துறை சார்ந்த பாடப்பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரிகளில் சேர கடந்த சில ஆண்டுகளாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இளங்கலை பிரிவில் ஒரு பாடப்பிரிவிற்கு 40 இடங்கள் மட்டுமே உள்ளன. சில கல்லூரிகளில் சில இடங்கள் மட்டுமே கூடுதலாக உள் ளன. இதனால் அனைத்து கல்லூரிகளிலும் 2 ஆயிரத்திற்கும் குறைவான இடங்களே உள்ளதால் 5ல் நான்கு பங்கு மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது. கலை, அறிவியல் பிரிவில் கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், வேளாண் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. ஆனால் போதிய கல்லூரிகள் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக இடம் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, “கலை, அறிவியல் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் கிராம நிர்வாக அலுவலர், குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் எழுதினால் அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசுக்கல்லூரிகள் தொடங்கப்பட்ட காலத்தில் மேல்நிலைக்கல்வி முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கைக்கும் தற்போதைய மாணவர்கள் எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. ஆனால் புதிதாக கல்லூரிகள் தொடங்கப்படவில்லை. இதனால் தற்போது போதிய இடங்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வரும் கல்வி ஆண்டில் கூடுதல் கல்லூரிகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Tags :
Next Story