உழவர் சந்தையில் முறைகேடுகளை தடுக்க கோரி கையில் காய்கறிகளுடன் வந்த விவசாயிகள்
உழவர் சந்தையில் முறைகேடுகளை தடுக்க கோரி கையில் காய்கறி களுடன் விவசாயிகள் மனு கொடுக்க வந்தனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்களின் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், கலெக்டர் ஹரிகரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி, செயலாளர் திருஞான சம்பந்தம் உள்ளிட்டவர்கள் கையில் தர்பூசணி, வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது-
உழவர் சந்தைகளை நிர்வகிக்க பொறுப்பாளர்களான நிர்வாக அதிகாரிகள், முறையாக தங்களது பணிகளை கவனிப்பது இல்லை. இதனால் உழவர் சந்தைகளில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இதன் காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக் கப்பட்டுள்ளனர். எனவே முறைகேடுகளை தடுக்க வேண்டும். உழவர் சந்தைகளில் உள்ள குளிர் பதன கிடங்குகளை தனியாருக்கு கொடுத்துள்ளதால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் குளிர்பதன கிடங்கு தனியாருக்கு விடப்பட்டு உள்ளது. இதன் மீது தக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உழவர் சந்தைகளில் மின்னணு தராசு பயன்படுத்த வேண்டும். பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்காத வகையில் காய்கறிகளின் விலையை நிர்ணயிக்க வேண்டும். உழவர் சந்தைகளில் குடிநீர், கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும். அனைத்து உழவர் சந்தைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோவை அசோகபுரம் மற்றும் இடிகரை பேரூராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், ‘செங்காளிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த தொழிற்சாலையை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த தமிழ்ரவி அளித்த மனுவில், வடவள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கோவை போத்தனூர், தாயம்மாள் லே-அவுட் பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களது ஆதார் அட்டையுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், ‘இங்கு நாங்கள் 50-க்கும் மேலான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். வாடகை கொடுக்க முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story