ஜனநாயக ரீதியில் கட்சியை நடத்தாவிட்டால் தொண்டர்களை திரட்டி போராட்டம், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி பேட்டி
ஜனநாயக ரீதியில் கட்சியை நடத்தாவிட்டால் தொண்டர்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கூறினார்.
கோவை,
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் 29-ந் தேதிக்குள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதை பிரதமர் நரேந்திரமோடி பாராளுமன்றத்தில் அறிவிக்காமல் இருப்பது ஏன்?. சட்டசபையில் பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்கிறதா என்று 29-ந் தேதி வரை காத்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் வரவேற்கக்கூடியது தான். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? என்பது சந்தேகமாக இருக்கிறது.
மத்திய அரசை எதிர்த்து அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்த போது அவை அவர்களின் சொந்த கருத்து என்று கூறப்பட்டது. ஆனால் நான் கூறிய கருத்திற்காக என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டனர். பா.ஜனதா கொடுத்த அழுத்தம் காரணமாக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளரை அடிமட்ட தொண்டர்கள் ஓட்டு போட்டு தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படிப்பட்ட பொதுச்செயலாளரை கட்சியின் பொதுக்குழு கூடி தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் கட்சியை நிர்வகிக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதை தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்ளவில்லை.
கட்சியில் இருந்து யாரையாவது நீக்க வேண்டுமென்றால் பொதுச்செயலாளர் தான் நீக்க முடியும். ஆனால் பொதுச் செயலாளர் அல்லாதவர்கள் கட்சி நீக்கல் நடவடிக்கை எடுத்தால் அது செல்லாது,, எனவே நான் உள்பட கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் நீக்கல் நடவடிக்கை செல்லாது. ஆகவே கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஓட்டுப்போட்டு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்தி ஜனநாயக முறையில் எடப்பாடி பழனிசாமி கட்சியை நடத்த வேண்டும். இல்லையென்றால் நீக்கப்பட்ட கட்சி தொண்டர்களை சந்தித்து அவர்களை திரட்டி போராட்டம் நடத்துவேன். இதற்காக கட்சி தொண்டர்களை விரைவில் சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அருகில் இருந்த அ.தி.மு.க. தொழிற்சங்க பேரவையின் முன்னாள் மாநில செயலாளர் சின்னசாமி கூறியதாவது:-
அ.தி.மு.க. தொழிற்சங்கத்துக்கு அகில இந்திய அங்கீகாரம் பெற வேண்டும் என்பதற்காக தான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்னை அ.தி.மு.க. தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆக்கினார். நானும் அதற்காக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்து அகில இந்திய அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்தேன். யாரோ செய்த சூழ்ச்சி காரணமாக ஜெயலலிதாவே அந்த விண்ணப்பத்தை வாபஸ் பெறுமாறு கூறினார்.
ஆனால் அவர் மறைந்த பின்னர் என்னை சில நாட்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கி உள்ளனர். என் மீது என்ன குற்றச்சாட்டு என்பதை கூறாமலேயே என்னை நீக்கி விட்டனர். என் மீது உள்ள பொறாமை, காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் இப்போது நான் ரூ.10 லட்சம் கையாடல் செய்து விட்டதாக கோர்ட்டில் முதல்-அமைச்சர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நான் தொழிற்சங்க கணக்குகளை முறையாக பராமரித்து வந்துள்ளேன். என்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு முடிந்த பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story