தாம்பட்டி கிராமத்தில் சிறுத்தைப்புலி தாக்கி முதியவர் படுகாயம்
தாம்பட்டி கிராமத்தில் சிறுத்தைப்புலி தாக்கி முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி,
ஊட்டி அருகே உள்ள தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). இவரது மனைவி பூவதியம்மாள் (50). இவர்களுக்கு ஜெயக்குமார் என்ற மகனும், பவானி என்ற மகளும் உள்ளனர். சுந்தரம் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சுந்தரம் வழக்கம்போல் தாம்பட்டியில் சாலையோரத்தில் ஆடுகளுக்கு புல் அறுக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வனவிலங்கு ஒன்று அவரின் கழுத்து மற்றும் முகப்பகுதியில் தாக்கியது.
இதனால் அவர் வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டார். வனவிலங்கு வனப்பகுதிக்குள் ஓடியது. சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சுந்தரம் முகத்தில் ரத்த வெள்ளத்துடன் கீழே கிடந்தார். உடனே படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுந்தரம் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெற்ற சுந்தரத்திடம் மருத்துவர்கள் மற்றும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தன்னை சிறுத்தைப்புலி தாக்கியதாக தெரிவித்தார். இதுகுறித்து நீலகிரி தெற்கு வனக்கோட்ட வனச்சரகர் சிவாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்து இடத்திற்கு சென்று புலியா அல்லது சிறுத்தைப்புலியா அல்லது வேறு ஏதேனும் வனவிலங்கு தாக்கியதா என்று நிலத்தில் பதிந்த கால் தடத்தை பார்வையிட்டனர்.
இதுகுறித்து வனத்துறை யினர் கூறும்போது, சுந்தரம் ஆடுகளுக்கு புல் சேகரித்த போது மேடான பகுதியில் இருந்து கரடி ஒன்று கீழே குதித்து அவரை தாக்கி இருக்கலாம். ஆனால், அவரை எந்த வனவிலங்கு தாக்கியதில் படுகாயம் ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவ அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என்றனர்.
தாம்பட்டி கிராம மக்கள் கூறும்போது, அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. சிறுத்தைப்புலி மனிதரை தாக்கியது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story