கிராம உதவியாளர் நேர்முகத்தேர்வில் முறைகேடு; பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
புதுக்கோட்டையில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற கிராம உதவியாளர் நேர்முகத்தேர்வில் முறைகேடு நடந்து உள்ளதாக பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் புதுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் தலைமையில் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு கோவில்பட்டியில் உள்ள சுடுகாடு நகராட்சி பராமரிப்பில் பல ஆண்டுகளாக உள்ளது. இந்த நிலையில் அங்கிருந்த இரும்புதூண்கள் மற்றும் தளங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு சேதடைந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
ஆவுடையார்கோவில் தாலுகா பாண்டிபத்திரம் குடிக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பதாகைகளை கையில் ஏந்தியவாறு வந்து கொடுத்த மனுவில், ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற, சிறுமருதூர் வருவாய் கிராமத்திற்கான கிராம உதவியாளர் நேர்முக தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை தாலுகா முள்ளூர் ஊராட்சி, வெள்ளையக்கோன்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் மன்னர் காலத்தில் இருந்து வெள்ளையக்கோன்பட்டியில் வசித்து வருகிறோம். இந்த நிலையில் புதுக்கோட்டை டவுன் தொண்டைமான் நகரில் வசித்து வரும் சிலர் எங்களது நிலத்தை ஆக்கிரப்பு செய்ய பல்வேறு வழிகளில் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Tags :
Next Story