7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி சாலைப்போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்


7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி சாலைப்போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 20 March 2018 3:00 AM IST (Updated: 20 March 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி சாலைப்போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி சாலைப்போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்., எல்.ஐ.சி., கூட்டுறவு கடன் தொகைகளை அந்தந்த துறையில் செலுத்தவேண்டும். 10 ஆண்டுகளாக பணிபுரியும் பெண் கண்டக்டர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று அவர்கள் புதுவை தலைமை தபால்நிலையம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத போராட்டத்துக்கு ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேலையன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன நிர்வாகி சீத்தராமன் தொடங்கி வைத்தார்.

சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன், தலைவர் பிரேமதாசன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். இதில் சாலைப்போக்குவரத்து கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் பத்மநாபன், பாலு, குமரன், குணசேகரன், செந்தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அடுத்தகட்டமாக வருகிற 22-ந்தேதி நகரப்பகுதி முழுவதும் தெருமுனை பிரசாரமும், 26-ந்தேதி விடுப்பு எடுத்து சட்டசபை முன்பு மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். 

Next Story