மதுரைகாளியம்மன் கோவில் தேர் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரைகாளியம்மன் கோவில் எதிரே உள்ள கடைகள், தேர் செல்லும் சாலைகளான கோட்டைமேடு, சந்தைபேட்டை, பவளக்கடைவீதி, தெற்குரதவீதி, காந்திரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா கடந்த 13-ந்தேதி முதல் பூ தட்டு சாற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று(செவ்வாய் கிழமை) 2-வது பூ தட்டு சாற்றுதல் மற்றும் பூச்சொரிதல் விழா நடக்கிறது. அடுத்த மாதம்(ஏப்ரல்) 3-ந்தேதி சின்னத்தேர், பெரியத்தேர் என இரண்டு தேர்கள் வண்ண, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேர் தலையலங்காரம் நடைபெறு கிறது. பின்னர் திருத்தேர் திருவீதியுலா நடைபெறுகிறது. இதற்காக தேர் செல்லும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தொட்டியம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்று தொட்டியம் தாசில்தார் பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் கோவில் எதிரே உள்ள கடைகள், தேர் செல்லும் சாலைகளான கோட்டைமேடு, சந்தைபேட்டை, பவளக்கடைவீதி, தெற்குரதவீதி, காந்திரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

Related Tags :
Next Story