சிந்தகம்பள்ளியில் யுகாதி திருவிழா பக்தர்கள் மீது பூசாரி நடந்து வழிபாடு
சிந்தகம்பள்ளியில் யுகாதி திருவிழாவையொட்டி பக்தர்கள் மீது பூசாரி நடந்து வழிபாட்டில் ஈடுபட்டார்.
பர்கூர்,
பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளி கிராமம் ஆந்திர எல்லையில் உள்ளது. இங்கு ஆணடுதோறும் யுகாதி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கடந்த 18-ந் தேதி மாரியம்மன் கோவிலுக்கு வேப்பம் இலை, வெல்லம் வைக்கும் நிகழச்சியும், அன்று இரவு தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி, நையாண்டி மேளம், கரகாட்டத்துடன் விமரிசையாக நடந்தது.
இரண்டாம் நாளான நேற்று அதிகாலை முத்துமாரியம்மன் சாமிக்கு கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மல்லிகைப்பூ மற்றும் வெள்ளியால் ஆன சிறிய குடைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கரகத்தை கோவில் பூசாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்றார். அப்போது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் அந்த கரகத்திற்கு சிறப்பு பூஜை செய்ததுடன், வேண்டுதல் உள்ளவர்கள் அங்கேயே ஆடுகளை வெட்டி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
பேய் விரட்டும் நிகழ்ச்சி
பிறகு ஆண், பெண் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அண்ணா நகரில் உள்ள காளிக்கோவில் அருகில் இருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை சாலையில் ஈரத்துணியுடன் படுத்திருந்தனர். அவர்கள் மீது கரகம் எடுத்து வந்த பூசாரி நடந்து சென்றார். பின்னர் கோவில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் கரகத்துடன் பூசாரி இறங்கியவுடன், அவரை தொடர்ந்து பக்தர்கள் இறங்கினர். பின்னர் பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் தங்கள் கைகளை மேலே தூக்கிக்கொள்ள, அந்த கைகள் மீது பூசாரி சாட்டையால் அடித்தார்.
இந்த விழாவையொட்டி சுமார் 500க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டது. அவ்வாறு பலியிடப்பட்ட ஆடு, கோழிகளை சமைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்தனர். இந்த விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் இருந்தும், பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு இளைஞர்கள் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், முட்டைகளை தலையில் உடைத்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரான பர்கூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், ஊர்கவுண்டர் ராமமூர்த்தி, ஊர்நாயுடு சுப்பிரமணி, பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி தாளாளர் சிவராஜ், மேலாளர் கூத்தரசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story