ராமராஜ்ய ரத யாத்திரைக்கு தடை கோரி தி.மு.க.-எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலைமறியல்; 161 பேர் கைது
தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு தடை விதிக்க வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ.கட்சிகளை சேர்ந்த 161 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி
தமிழ்நாட்டில் ராமராஜ்ய ரதத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதனை சட்டமன்றம் ஏற்காததால், சென்னையில் சட்டமன்றம் முன்பு அவர் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ராமராஜ்ய ரத யாத்திரைக்கு தடை விதிக்க கோரியும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று மதியம் பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு பொதுக் குழு உறுப்பினர் ஜெகன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட பொருளாளர் சுசீ.ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 65 பேரை கைது செய்தனர்.
கோவில்பட்டி
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்துக்கு, நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், நகர பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் முத்துராமன், செல்வராமன், நெசவாளர் அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், வக்கீல் அணி ராமச்சந்திரன், வர்த்தக அணி ராஜகுரு, இலக்கிய அணி சோழபெருமாள், மாணவர் அணி கணேசன், தாமோதர கண்ணன், விவசாய அணி சந்தனம், நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பவுல்ராஜ் (கிழக்கு) விநாயகம் (மேற்கு) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
தி.மு.க.-எஸ்.டி.பி.ஐ.
இதேபோன்று எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு தி.மு.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். நகர செயலாளர் பாரதி கணேசன், நெசவாளர் அணி பிச்சை, இளைஞர் அணி குமார், மாணவர் அணி மயில்ராஜ், தேவகிருபை, துரை, தகவல் தொழில்நுட்ப அணி லெனின், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொருளாளர் நாசர், நகர தலைவர் ஷேக் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 24 பேரை எட்டயபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு
கயத்தாறு பழைய பஸ் நிறுத்தத்தில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டன. ஒன்றிய செயலாளர்கள் சின்ன பாண்டியன் (கயத்தாறு), நவநீதகண்ணன் (கோவில்பட்டி கிழக்கு), நகர துணை செயலாளர் குருசாமி பாண்டியன், தொண்டர் அணி சுரேஷ்கண்ணு, செல்வகுமார், மாவட்ட பிரதிநிதிகள் தேவசகாயம், பவுன்ராஜ், பொருளாளர் மோகன், இளைஞர் அணி ஜெபஸ், சதீஷ் குமார், பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கோதண்டராமர், ஜமாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட 16 பேரை கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
குரும்பூர்
குரும்பூர் மெயின் பஜாரில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். நகர செயலாளர்கள் ராமஜெயம் (தென்திருப்பேரை), பாலம் ராஜன் (குரும்பூர்), ஒன்றிய செயலாளர் நவீன், நாலுமாவடி கிளை செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட 25 பேரை குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகிலா தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
ஏரல்
ஏரல் காந்தி சிலை அருகில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் பி.ஜி.ரவி, நகர செயலாளர்கள் பார்த்தீபன் (ஏரல்), வரதராஜ் ஸ்டாலின் (சாயர்புரம்), முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் மணிவண்ணன், நிர்வாகிகள் ராயப்பன், அனஸ், கார்த்தீசன், ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட 31 பேரை ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி கைது செய்தார்.

Related Tags :
Next Story