நாகர்கோவிலில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் போராட்டம்


நாகர்கோவிலில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2018 4:15 AM IST (Updated: 21 March 2018 12:04 AM IST)
t-max-icont-min-icon

13–வது ஊதிய ஒப்பந்தத்தையொட்டி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

13–வது ஊதிய ஒப்பந்தத்தையொட்டி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்த போராட்டத்தையொட்டி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட 4 பேருக்கு 2 மாதங்களாகியும் பணி வழங்கப்படாததை கண்டித்தும், அவர்களுக்கு பணி வழங்கக்கோரியும் நேற்று அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன் போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை தலைமை தாங்கினார். தலைவர் ஞானதாஸ், பொருளாளர் கனகராஜ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த லட்சுமணன், எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன், பணியாளர் சம்மேளனத்தை சேர்ந்த சந்தானம், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த லட்சுமணன், தயானந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story