தேங்காப்பட்டணத்தில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்


தேங்காப்பட்டணத்தில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2018 3:45 AM IST (Updated: 21 March 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

தேங்காப்பட்டணத்தில் கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 250 கிலோ ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அழகியமண்டபம்,

குமரி மாவட்டத்தில் இருந்து ரே‌ஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி கடத்தப்படும் ரே‌ஷன் அரிசி, மண்எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தநிலையில் மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை 7 மணி அளவில் தேங்காப்பட்டணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேங்காப்பட்டணம் பஸ் நிறுத்தத்தின் பின்புறம் சில மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த மூடைகளை சோதனை செய்தனர். அப்போது அவற்றில் 250 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். இதுபற்றி நடத்திய விசாரணையில், ரே‌ஷன் அரிசியை பதுக்கி வைத்து பஸ் மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிவந்தது. ரே‌ஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story