காயல்பட்டினத்தில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை மனைவி கோபித்து கொண்டு சென்றதால் சோகமுடிவு


காயல்பட்டினத்தில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை மனைவி கோபித்து கொண்டு சென்றதால் சோகமுடிவு
x
தினத்தந்தி 21 March 2018 2:00 AM IST (Updated: 21 March 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில், மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆறுமுகநேரி,

காயல்பட்டினத்தில், மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட தொழிலாளி

காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாதாளமுத்து (வயது 35). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பாதாளமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிலரிடம் கடன் வாங்கி, வெளிநாட்டில் வேலைக்கு சென்றார்.

அங்கு சரியாக சம்பளம் கிடைக்காததால், அவர் கடந்த மாதம் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். பின்னர் அவர் தன்னுடைய அண்ணன் சக்திவேலுடன் சேர்ந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, தன்னுடைய கணவரிடம் கோபித்து கொண்டு, நாசரேத்தில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு குழந்தையுடன் கீதா சென்றார். இதனால் மனமுடைந்த பாதாளமுத்து நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவர் வேலைக்கு வராததால், சக்திவேல் தன்னுடைய தம்பியின் வீட்டுக்கு சென்றார். அப்போது பாதாளமுத்து தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர் அலறினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பாதாளமுத்துவின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story