கடையநல்லூர் அருகே புதிதாக கால்நடை அரசு ஆஸ்பத்திரிகள் அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்


கடையநல்லூர் அருகே புதிதாக கால்நடை அரசு ஆஸ்பத்திரிகள் அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 March 2018 3:15 AM IST (Updated: 21 March 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே புதிய கால்நடை அரசு ஆஸ்பத்திரிகளை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

நெல்லை,

கடையநல்லூர் அருகே புதிய கால்நடை அரசு ஆஸ்பத்திரிகளை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

கால்நடை ஆஸ்பத்திரிகள்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் யூனியன் கள்ளம்புள்ளி மற்றும் பொய்கையில் கால்நடை மருத்துவ கிளை ஆஸ்பத்திரிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு, புதிய கால்நடை அரசு ஆஸ்பத்திரிகளை திறந்து வைத்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் ஒன்றியத்தில் பொய்கை ஊராட்சியில் பொய்கை மற்றும் கள்ளம்புளி பகுதியில் கால்நடை மருத்துவ கிளை ஆஸ்பத்திரிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கள்ளம்புளி பகுதியில் உள்ள கரடிகுளம், கோவிலானூர், சின்னத்தம்பிநாடானூர், சுப்பிரமணியபுரம் ஆகிய கிராமங்கள், பொய்கை பகுதியில் கீழ்பொய்கை, திரிபுரசுந்தரபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போர் பயன் பெறுவார்கள். கள்ளம்புளி பகுதியில் சுமார் 7,150 கால்நடைகளும், பொய்கை பகுதியில் சுமார் 7,000 கால்நடைகளும் பயன்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

விழாவில் தென்காசி உதவி கலெக்டர் ராஜேந்திரன், டான்பெட் துணை தலைவர் கண்ணன், கால்நடை இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் அருணாசலக்கனி, முதன்மை மருத்துவர்கள் முருகையா, அசன்இப்ராகிம், கிருஷ்ணமுரளி, கால்நடை மருத்துவர் செல்வ குத்தாலிங்கம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story