மு.க.ஸ்டாலின் கைது- ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: நீலகிரியில் அரசியல் கட்சியினர் சாலை மறியல்
ராமராஜ்ய ரத யாத்திரை மற்றும் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து நீலகிரியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 317 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி,
கேரளாவில் இருந்து செங்கோட்டை வழியாக தமிழகத்துக்குள் ராமராஜ்ய ரத யாத்திரை வந்தது. இதற்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், ம.தி.மு.க., மனித நேய மக்கள் உள்பட பல்வேறு கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்குள் ரத யாத்திரையை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டார். இதேபோல் திருநெல்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்தும், ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில், ரத யாத்திரையை கண்டித்தும், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் ஊட்டி காபி ஹவுஸ் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது.
முன்னதாக தி.மு.க.வினர் கட்சி அலுவலகத்தில் இருந்து கொடிகளை ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற தலைவர் முஸ்தபா முன்னிலை வகித்தார். இதையடுத்து தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் துரை உள்பட தி.மு.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், விசுவ இந்து பரிஷத் ரத யாத்திரையை கண்டித்து ஊர்வலமாக வந்து ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் சாலை மறியல் நடந்தது. இதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமை தாங்கினார். அவர்கள் சாலையில் அமர்ந்து ரத யாத்திரையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் 72 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர்.
அதேபோல் ஊட்டி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஊட்டி ஏ.டி.சி. திடலில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் தம்பி இஸ்மாயில் தலைமை தாங்கினார். சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர். ஊட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர், மனித நேய மக்கள் கட்சியினர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் உள்பட மொத்தம் 147 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கூடலூரில் விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ., முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பழைய பஸ் நிலையத்தில் கொடிகளை பிடித்தவாறு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன், நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் கேதீசுவரன், மனித நேய மக்கள் கட்சி கலீல்முகமது, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் பஷீர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பிரகாஷ், காஞ்சனா செல்வராஜ் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, நிர்வாகிகள் பாண்டியராஜ், ரசாக், ஜெயக்குமார், தாகீர், சுப்பிரமணி, நெடுஞ்செழியன், மாதேஷ் உள்பட 39 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவங்களால் கூடலூர்- ஊட்டி, மைசூர் இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
மஞ்சூர் பஜாரில் நேற்று தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ். பாபு தலைமையில் மாவட்ட பிரதிநிதிகள் ஈசுவரன், மாடக்கண்ணு, ஒன்றிய விவசாய அணி செயலாளர் ஆறுமுகம், பிக்கட்டி பேரூராட்சி செயலாளர் நடராஜன் உட்பட மறியலில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எக்ஸ்போ செந்தில் மற்றும் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட அமைப்பாளர் மண்ணரசன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் எஸ்.கைகாட்டி கிராம பகுதியில் தி.மு.க. நிர்வாகி கருப்பையா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
பந்தலூர் பஜாரில் திராவிடமணி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு, சட்டமன்ற தொகுதி செயலாளர் பெரியசாமி உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கொளப்பள்ளியில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. 10 பேர் கைது செய்யப் பட்டனர்.
நீலகிரியில் மறியலில் ஈடுபட்ட மொத்தம் 317 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story