மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை
சிவகங்கை அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
மதகுபட்டி,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் ராஜா(வயது 30). இவர் சிவகங்கையை அடுத்த மதகுபட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை தோட்டத்தின் உள்ளே ராஜா துணியால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மதகுபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த போலீசார், ராஜாவின் உடலை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ராஜாவும், நகரம்பட்டியை சேர்ந்த சுந்தரேசுவரன் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். மேலும் அவர்கள் சேர்ந்து மதுகுடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் ராஜாவும், சுந்தரேசுவரனும் சேர்ந்து மதுகுடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவரை யொருவர் அவர்கள் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சுந்தரேசுவரன், ராஜாவை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ராஜாவை கொலை செய்த சுந்தரேசுவரனை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Related Tags :
Next Story