ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் 28¼ பவுன் நகைகள், பணம் திருட்டு
குளித்தலையில் ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து 28¼ பவுன் தங்க நகைகள், பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குளித்தலை,
குளித்தலை அண்ணாநகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் மாரியாயி (வயது 59). ஓய்வு பெற்ற நீதிபதியான இவர் தனது அக்கா சரசுவுடன் 3 மாதங்களுக்கு முன்பு குறுக்குத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் போக்கியத்திற்கு குடியிருந்தார். பின்னர் குளித்தலை பெரியார் நகர் அருகே உள்ள ஏ.சி.டி. நகரில் புதிதாக வீடுகட்டி கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி அங்கு வசித்து வருகிறார். இருப்பினும் அண்ணாநகரில் உள்ள வீட்டில் பீரோ உள்ளிட்ட சில பொருட்களை வைத்துள்ளார். தினந்தோறும் பகல் நேரங்களில் இந்த வீட்டிற்கு வந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு மாலையில் புதிதாக கட்டிய வீட்டிற்கு சென்றுவிடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி அண்ணாநகர் வீட்டிற்கு வந்துவிட்டு, பின்னர் வீட்டை பூட்டிவிட்டு புதிய வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் அண்ணாநகரில் உள்ள வீட்டிற்கு தனது அக்காவுடன் வந்தார். அப்போது வீட்டின் கிரில் கதவு, நிலைக்கதவு மற்றும் படுக்கையறை கதவுகளில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. இதையடுத்து பீரோவில் பார்த்த போது அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.40 ஆயிரம், 28¼ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. பின்னர் இதுகுறித்து அவர் குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் திருட்டு சம்பவ நடந்த வீட்டை சோதனை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து மாரியாயி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story