காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி த.மா.கா. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழ கத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி த.மா.கா. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விருதுநகர்,
த.மா.கா. இளைஞர் அணி சார்பில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி இணை செயலாளர் எம்.கே.ராஜன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் அமீர்அம்சா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், வடக்கு மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக விவசாயத்தை பாதுகாத்திட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகத்துக்கு உரிய காவிரிநீரை பெற்றிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலைகளை கொண்டு வந்து விற்பனையை முறைப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளித்து பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும்.
மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ கத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற இணைப்பு சாலைகள் மற்றும் நகர்புற சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பை நீக்க வேண்டும். மேற்கண்ட வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story