விவசாயிகள் நலன் கருதி நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வரக்கூடாது: அய்யாக்கண்ணு பேட்டி
விவசாயிகள் மற்றும் இயற்கையின் நலன் கருதி நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது என்று தேனியில், தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
தேனி,
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், சின்னமனூர், பெரியகுளம் பகுதிகளில் நதிநீதி இணைப்பு குறித்தும், விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். பின்னர் மாலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்காமலும், சாகுபடி செய்ய தண்ணீர் கொடுக்காமலும் மத்திய அரசும், மாநில அரசும் ஏமாற்றுவதால் விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு ஓடிவிட்டால், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்கி, பெட்ரோல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை 2 ஆயிரம் அடிக்கு கீழே கொண்டு சென்று விடுவார்கள்.
பின்னர், குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல், நிலத்தை விற்காத விவசாயிகளும் சாகுபடி செய்ய முடியாது. தமிழகம் பாலை வனமாகிவிடும். இந்த நிலை ஏற்பட்டால் கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களை கொடுத்து பொதுமக்களை பாதிப்படைய செய்வார்கள்.
தமிழ்நாட்டில் நடக்கும் விவசாயம் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை கிடைக்கிறது. தமிழகம் பாலை வனமாகிவிட்டாலும், ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி முதல் 20 லட்சம் கோடி வரை வருமானம் கிடைக்கும் என்பதால் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. விவசாயிகள் மற்றும் இயற்கையின் நலன் கருதி இந்த திட்டத்தை கொண்டு வரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கலெக்டரிடம் அய்யாக்கண்ணு அளித்த கோரிக்கை மனுவில், “அனைத்து விவசாயிகளின் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். முல்லைப்பெரியாறு சம்பந்தமாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறைவேற்றித் தர வேண்டும். அனைத்து விவசாய பொருட்களுக்கும் லாபகரமான விலை கொடுப்பதுடன், வெளிநாட்டில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது. முல்லைப்பெரியாற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும். வருசநாடு பகுதியில் பெய்யும் மழைநீர் முழுமையும் வைகை நதிக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக-கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவில் முதல் மறையூர் வரையுள்ள எல்லைப்பகுதியை தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story