லிங்காயத்சமூகத்திற்கு தனிமத அங்கீகாரம்: அரசின் முடிவை ஆராய்ந்தபிறகே பா.ஜனதா நிலைப்பாடு தெரிவிக்கப்படும்
லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கிய மாநில அரசின் முடிவை ஆராய்ந்த பிறகே பா.ஜனதா நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,

லிங்காயத் சமூகம் தனி மதம்
லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக அரசு அங்கீகரித்து உள்ளது. இதற்கு அனுமதி அளிக்கும்படி மத்திய அரசுக்கும் கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த முடிவு குறித்து கர்நாடக பா.ஜனதா தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளது. இது மதம் சார்ந்த விவகாரம் என்பதால், அவசரப்பட்டு எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் அதே சமூகத்தை சேர்ந்த கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவை லிங்காயத் மற்றும் வீரசைவ சமூகத்தை சேர்ந்த மடாதிபதிகள் சிலர் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜனதாவின் நிலைப்பாட்டை...
லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக அரசு அங்கீகரித்து உள்ளது. இதுபற்றி அகில இந்திய வீரசைவ மகாசபா மடாதிபதிகள் மற்றும் சமூக முக்கிய தலைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும். கர்நாடக அரசின் முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. சித்தராமையா மிகுந்த திறமையோடு செயல்பட்டு முடிவு எடுத்துள்ளார்.
அறிவுகூர்மையை பயன்படுத்தி சித்தராமையா எடுத்துள்ள இந்த முடிவு குறித்து ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது. அகில இந்திய வீரசைவ மகாசபா தலைவர் சாமனூர் சிவசங்கரப்பாவை அழைத்து பேசி கூட்டத்தை கூட்டுமாறு கூறுவேன். அரசு எடுத்துள்ள முடிவின் சாதக-பாதகங்கள் குறித்து ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவு எடுக்க வேண்டியது அவசியம். அதன் பிறகே பா.ஜனதாவின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Tags :
Next Story