7 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் தீர்ப்பு கூற கோரிய ஜனதாதளம் (எஸ்) கட்சி மனு மீது ஐகோர்ட்டில் இன்றும் விசாரணை
கட்சி மாறி வாக்காளித்த 7 எம்.எல்.ஏ.க்கள் குறித்த விவகாரத்தில் சபாநாயகர் தீர்ப்பு கூற கோரிய ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் இன்றும்(புதன்கிழமை) விசாரணை நடைபெற உள்ளது.
பெங்களூரு,

கொறடா உத்தரவு
கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியான இடங்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் வேட்பாளராக பாரூக் நிறுத்தப்பட்டார். கட்சி வேட்பாளருக்கு தான் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை மீறி அக்கட்சியை சேர்ந்த ஜமீர்அகமது கான், அகண்ட சீனிவாசமூர்த்தி, ரமேஷ்பன்டிசித்தேகவுடா, இக்பால் அன்சாரி, பாலகிருஷ்ணா, செலுவராயசாமி, பீமாநாயக் ஆகியோர் காங்கிரசுக்கு வாக்களித் தனர்.
கொறடா உத்தரவை மீறி வாக்களித்த தங்கள் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகரிடம் அக்கட்சி மனு கொடுத்தது. அதன் மீது சபாநாயகர் நேற்று முன்தினம் விசாரணையை நடத்தி முடித்தார். தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியாகும் 4 இடங்களுக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசுக்க வாக்களிக்க...
இந்த தேர்தலிலும் ஜனதா தளம்(எஸ்) சார்பில் வேட்பாளராக பாரூக் நிறுத்தப்பட்டுள்ளார். இப்போதும் அந்த 7 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து டெல்லி மேல்-சபை தேர்தலுக்கு முன்பு, கட்சி மாறி வாக்களித்த 7 எம்.எல்.ஏ.க்கள் மீதான விசாரணையில் தீர்ப்பை அறிவிக்க கோரி சபாநாயகரிடம் ஜனதா தளம்(எஸ்) மனு கொடுத்தது.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் அக்கட்சி ஒரு ‘ரிட்‘ மனுவை தாக்கல் செய்தது. அதில், டெல்லி மேல்-சபை தேர்தலுக்கு முன்பு சபாநாயகர் தனது தீர்ப்பை வெளியிட கோரப்பட்டது. அதன் மீது ஐகோர்ட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது. அதில் அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராகி, சபாநாயகர் தரப்பு குறித்து சில விவரங்களை எடுத்து வைத்தார்.
இன்றும் விசாரணை
அப்போது, தான் சபாநாயகரை நேரில் சந்தித்து பேசியதாகவும், அவர் 23-ந் தேதிக்குள் தீர்ப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்தார் என ஐகோர்ட்டில் கூறினார். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி இன்றைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்தார்.
அதன்படி ஜனதா தளம்(எஸ்) மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.

Related Tags :
Next Story