நாமக்கல்லில் த.மா.கா. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் த.மா.கா. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 March 2018 4:00 AM IST (Updated: 21 March 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் கோஸ்டல் இளங்கோ, செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் அருள்ராஜேஸ் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் து.சு.மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பஸ்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் கோவிந்த், நகர தலைவர் சக்திவெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார். 

Next Story