திருடிய ஆட்டோக்களை வாடகைக்கு விட்ட 2 டிரைவர்கள் கைது
தானேயை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் இம்ரான் அன்வர் சேக்(வயது 32), அப்துல் லதிப்(27).
தானே,
சமீபத்தில் தானே போலீசார் இவர்கள் 2 பேரையும் திருட்டு வழக்கு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் தானே, மும்பையில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தது தெரியவந்தது. மேலும் 2 பேரும் திருடிய ஆட்டோக்களில் பதிவு எண்ணை மாற்றி அதை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
போலீசார் 2 பேரிடமும் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலான 9 ஆட்டோக்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கைள அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Related Tags :
Next Story