திருப்பத்தூரில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிப்பு


திருப்பத்தூரில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 21 March 2018 5:17 AM IST (Updated: 21 March 2018 5:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன. அதில் 13 ஆயிரம் வீடுகளுக்கு நகராட்சி மூலம் மேட்டூர் கூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.

திருப்பத்தூர்,

குடிநீர் வழங்கப்படும் வீடுகள், வணிக நிறுவனங்கள் மாதந்தோறும் குடிநீர் கட்டணம் நகராட்சிக்கு வழங்க வேண்டும்.

ஆனால் பல இடங்களில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்து உள்ளார்கள். பலமுறை நகராட்சி சார்பில் கடிதம் அனுப்பியும், நேரில் வலியுறுத்தியும் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவின்பேரில், வி.சி.எம்.தெருவில் உதவி பொறியாளர் அறிவழகன் தலைமையில், மேற்பார்வையாளர் அன்பரசு மற்றும் நகராட்சி ஊழியர்கள் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் தொடர்ந்து குடிநீர், சொத்து வரி, கடை வாடகை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் எச்சரித்துள்ளார். 

Next Story