ராமர் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஸ்டாலினுக்கு உரிமை இல்லை
ராமர் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மு.க.ஸ்டாலினுக்கு உரிமையில்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஆம்பூர்,
பாரதீய ஜனதா கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட சக்தி கேந்திரம் - மகாசக்தி கேந்திரம் பொறுப்பாளர்கள் கூட்டம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடந்தது. மாவட்ட தலைவர் கொ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், கோட்ட பொறுப்பாளர் பிரகாஷ், அமைப்பு செயலாளர் ரமேஷ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியின் 49 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அந்த தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராக உள்ளது.
முதலில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கொண்டு சேர்க்கக்கூடியது உள்ளாட்சிதான். தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது தமிழகத்திற்கு வந்துள்ள ராமர் ரத யாத்திரை பல்வேறு மாநிலங்களில் வெற்றிகரமாக நடந்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் அந்த ரத யாத்திரைக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரத யாத்திரையை எதிர்க்கும் துணிச்சல் தமிழகத்தில் எவருக்கும் இருக்ககூடாது. அந்த துணிச்சலை பா.ஜ.க. ஒருபோதும் அனுமதிக்காது. ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மு.க.ஸ்டாலினுக்கு உரிமை இல்லை.
அண்ணா, பெரியாரால் பண்படுத்தப்பட்ட மண் தமிழ்நாடு. அதற்கு முன்னதாக ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பண்படுத்தப்பட்டது தமிழக மண். இந்துகளுக்கு மதநம்பிக்கை இருக்கவே கூடாதா, இந்து மத நம்பிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் உதாசீனப்படுத்தி வருகின்றனர்.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினும் அதையே செய்து வருகிறார். ஸ்டாலினை இந்து மக்கள் அடையாளம் காண வேண்டும்.
இந்து மத நம்பிக்கையை உதாசீனப்படுத்துபவர்களை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கும். தமிழக அரசியல் கட்சிகளின் செயல்பாடு இந்து மக்களை புண்படுத்துவதாக உள்ளது. பா.ஜ.க. சார்பாக இறுதி எச்சரிக்கை விடுக்கின்றோம். இந்து மத உணர்வுகளை புண்படுத்தினால் நாங்கள் யார் என்பதை காட்டுவோம். இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் எதிர்மறையான அரசியல் உள்ளது. நேர்மறையான அரசியல் வரவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வளர்ச்சிப் பாதையை நோக்கி அரசியல் கட்சிகள் செல்ல வேண்டும். பா.ஜ.க. அத்தகைய வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மத்திய அரசால் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம், வேலூரில் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு ரூ.2,500 கோடி பயிர்காப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் மற்ற அரசியல் கட்சிகளால் பா.ஜ.க. மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழகத்தையும், தமிழையும் உயர்த்தி பிடிப்பது பா.ஜ.க.தான். தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும். அந்த மாற்றம் பா.ஜ.க.வால் மட்டுமே முடியும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் பங்கீடு கண்டிப்பாக கிடைக்கும். சிறுபான்மை மக்களும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக உள்ளனர். தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. பிரதிநிதிகள் அதிகளவில் வெற்றி பெறுவார்கள்.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் டாஸ்மாக் பார் எடுக்க தயாராக உள்ளதாக சட்டசபையில் கூறுகிறார். ஆட்சி அமைப்போம் என கூறினால் பரவாயில்லை. டாஸ்மாக் பார் எடுக்க நினைக்கும் தி.மு.க.வினர் எப்படி மதுவிலக்கை அமல்படுத்துவார்கள்?. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா வழியில் செயல்படுகிறாரா?, கலைஞர் வழியில் செயல்படுகிறாரா? என்பது அவருக்கே தெரியவில்லை. சட்டசபையில் வழிநடத்தும் தலைவராக இல்லாமல் வெளிநடப்பு செய்யும் தலைவராக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story