வெண்டிங் மெஷின் வரலாறு


வெண்டிங் மெஷின் வரலாறு
x
தினத்தந்தி 22 March 2018 10:45 PM GMT (Updated: 21 March 2018 9:49 AM GMT)

புகையிலையை வினியோகிக்க வெண்டிங் மெஷினை வைத்திருந்தனர்.

17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தங்கும் விடுதியில் புகையிலையை வினியோகிப்பதற்காக வெண்டிங் மெஷின் எந்திரத்தை வைத்திருந்தனர். துவாரத்தில் நாணயத்தை செலுத்தினால் புகையிலை வந்து விழும். ஆரம்பகாலத்தில் திருடர்கள் இந்த எந்திரத்தை உடைத்து எளிதாக திருடிச் சென்றனர். 1883-ம் ஆண்டு பெர்சிவால் எவரிட் என்பவர் தபால் கார்டுகளை வினியோகிப்பதற்காக ஒரு எந்திரத்தை உருவாக்கினார். இதில் அவ்வளவு சீக்கிரம் திருட முடியவில்லை. இதே காலத்தில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் டெலிபோன் ‘பில்’களை கட்டவும், மின்சாரம், கியாஸ் கட்டணம் செலுத்தவும் நாணய எந்திரங்களை பயன்படுத்தினார்கள். 1895-ல் பழங்களை வினியோகிக்கும் ஏ.டி.எம். அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. சார்லஸ் பே என்பவர் இதை உருவாக்கி இருந்தார். வெண்டிங்மெஷின்களைப் பின்பற்றியே இன்றைய ஏ.டி.எம். எந்திரங்கள் உருவாக்கப்பட்டன. பொருட்களுக்குப் பதில் பணத்தை வினியோகித்த ஏ.டி.எம்.கள். உலகெங்கிலும் அதிவேகமாகப் பரவிவிட்டன. 

Next Story