ராஜநடை பழகும் வருங்கால இளவரசி..!


ராஜநடை பழகும் வருங்கால இளவரசி..!
x
தினத்தந்தி 23 March 2018 5:15 AM IST (Updated: 21 March 2018 3:39 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து இளவரசர் ஹாரியை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார், நடிகை மேகன் மார்க்கெல்.

டிகை மேகன் மார்க்கெல் திருமணத்துக்கு பிறகு ராஜ குடும்பத்தினர் போல் நடந்து கொள்ளவும், பேசவும் பயிற்சி எடுத்து வருகிறார். இன்று மேகன் மார்க்கெல் என்ன பேசினாலும் என்ன செய்தாலும் அது அவரின் தனிப்பட்ட வி‌ஷயம், ஆனால் மே மாதம் 19–ந் தேதிக்கு பிறகு அவரின் செய்கைகள் அனைத்தும், ராஜ குடும்பத்து செய்கைகளாகவே பார்க்கப்படும்.

இளவரசர் ஹாரியை திருமணம் செய்துகொள்ள போகும் நடிகை மேகன் மார்க்கெல், தொழில் ரீதியாக ஒரு நடிகை. எனவே அவர் திருமணமாகி ராஜ குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறுவதற்குள் ராஜ குடும்பத்தினர் எவ்வாறு நடந்து கொள்வார்கள், பிறரிடத்தில் எவ்வாறு பேசுவார்கள் என்பதை அவர் திருமணத்துக்கு முன்னதாகவே கற்று வருகிறார். இதன் மூலம் மேகன் மார்க்கெல் தேநீர் கோப்பையை எவ்வாறு கையில் ஏந்துவது, ஆடையை எவ்வாறு அணிவது, சாப்பிடும் முறை ஆகியவற்றை கற்று வருகிறார். பல கெடுபிடிகளை விதித்திருக்கும் ராஜ குடும்பம், மேகன் மார்க்கெல்லுக்கு ஒரே ஒரு விதிமுறைக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறது. அது என்ன தெரியுமா?, பொது இடங்களில் கட்டி அணைப்பது. ஆம்..! ராஜ குடும்ப வழக்கப்படி அவர்கள் பொது இடத்தில் யாரையும் கட்டி அணைப்பது இல்லை. ஆனால் மேகன் மார்க்கெல் நடிகை என்பதால், துறை சார்ந்த விழாக்களில் மற்றவர்களை கட்டி அணைக்க அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

Next Story