நெல்லை அருகே பெண் அதிகாரி நெருக்கடியால் தீக்குளித்த அங்கன்வாடி உதவியாளர் சாவு உடலை வாங்க மறுத்து போராட்டம்
நெல்லை அருகே பெண் அதிகாரி நெருக்கடி காரணமாக தீக்குளித்த அங்கன்வாடி உதவியாளர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடந்தது.
நெல்லை,

அங்கன்வாடி உதவியாளர்
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி சுமதி (வயது 37). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ் இறந்து விட்டார். இதையடுத்து சுமதி தனது 2 குழந்தைகளுடன் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
கணவரை இழந்த சுமதிக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடி உதவியாளர் பணி கிடைத்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் நேரடியாக இந்த பணியை அவருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
தீக்குளிப்பு
இதையடுத்து சுமதி கணவரின் ஊரான வாகைகுளத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் வேலைக்கு போகாமல் இருந்தார். கடந்த 12–ந் தேதி பெற்றோர் வீட்டில் அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சுமதியின் உடலில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சாவு
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் பெண் அதிகாரி ஒருவர் கொடுத்த நெருக்கடியால் சுமதி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கடையம் வட்டார குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் சாந்தியை, மாநில திட்ட இயக்குனர் பணியிடை நீக்கம் செய்தார்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சுமதி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சுமதியின் உடலை வாங்க மறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று மாலை நடந்த முற்றுகை போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார்.
கைது செய்ய கோரிக்கை
கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கூறும்போது, “சுமதி பணியில் இருந்தபோது அதிகாரி சாந்தி அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இந்த வேலையை விட்டு சென்றால், வேறு ஒருவரை ரூ.3 லட்சம் வாங்கி கொண்டு நியமிப்பேன் என்று கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுமதி கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் மனமுடைந்த சுமதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான சாந்தியை கைது செய்ய வேண்டும்.
சுமதியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்“ என்றனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட செயலாளர் மோகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஜெகிரா பாத்திமா, விஜயா, தாட்சாயினி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி பணியாளர்கள் திடீரென்று முற்றுகை போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story