கலந்தாய்வு நடத்தி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்
கலந்தாய்வு நடத்தி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நெல்லையில் நடந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,

பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரம்மநாயகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவராக ஆசிரியர் மணிமேகலை, தெற்கு மண்டல செயலாளராக முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது. கடந்த பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு பிறகு ஏற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு உடனடியாக இரண்டாம் கட்ட பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
வகுப்புக்கு ஒரு ஆசிரியர்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை அணி திரட்டி வருகிற மே மாதம் 8–ந் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவது. அங்கன்வாடி உதவியாளரை தற்கொலைக்கு தூண்டிய கடையம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story