தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அனல்மின் கரி கையாளுவதில் புதிய சாதனை


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அனல்மின் கரி கையாளுவதில் புதிய சாதனை
x
தினத்தந்தி 22 March 2018 3:00 AM IST (Updated: 21 March 2018 9:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அனல்மின் கரி கையாளுவதில் புதிய சாதனை படைத்து உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அனல்மின் கரி கையாளுவதில் புதிய சாதனை படைத்து உள்ளது.

புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளம் 1–ல் கடந்த 20.3.2018 அன்று ஒரே நாளில் 48 ஆயிரத்து 701 மெட்ரிக் டன் அனல்மின் கரி கையாளப்பட்டு புதிய சாதனை படைத்து உள்ளது. இதற்கு முன்பு, கடந்த 14.1.2018 அன்று ஒரே நாளில் 42 ஆயிரத்து 508 மெட்ரிக் டன் அனல்மின்கரி கையாளப்பட்டு இருந்தது.

கடந்த நிதியாண்டில் நெய்வேலி அனல்மின் நிலையத்துக்காக, துறைமுக வடக்கு சரக்கு தளம் 1–ல் 3.28 மில்லியன் டன் அனல்மின் கரி கையாளப்பட்டது. இந்த நிதியாண்டில் பிப்ரவரி 2018 வரை 3.11 மில்லியன் டன் அனல்மின் கரி கையாளப்பட்டு உள்ளது.

பாராட்டு

இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரையும் வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஜெயக்குமார் பாராட்டினார்.

Next Story