ரூ.5 லட்சம் போதைப்பொருளுடன் ஒருவர் கைது


ரூ.5 லட்சம் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
x
தினத்தந்தி 22 March 2018 2:15 AM IST (Updated: 22 March 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பை அந்தேரி-காட்கோபர் லிங்க் ரோடு சாய்நாத் நகர் குடிசைப்பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மும்பை,

போலீசார் போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி சோதனை செய்தனர். இதில், அங்குள்ள சாட்டுபாய் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் விற்பனை நடந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட குடிசை வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ 262 கிராம் எடையுள்ள சரஸ் என்ற போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் ஆகும்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டில் போதைப்பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த முகமது ரபீக் (வயது48) என்பவரை கைது செய்தனர்.

Next Story