நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்
நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்ட கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்ட கூட்டமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வனிதாமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு) மாவட்ட குழு நிர்மலா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிர்வாகிகள் பழனி, நஞ்சப்பன், பாண்டுரங்கன், முத்து, விஜயா, ராணி, கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு) மாவட்ட செயலாளர் ஸ்டாலின்பாபு, ஏ.ஐ.கே.கே.எஸ். மாநில தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கண்டன கோஷங்கள்
அப்போது அவர்கள் கூறியதாவது:- ஏழை, வயதான முதியவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகையினை மீண்டும் வழங்கிட வேண்டும். நிலமற்ற ஏழைகளுக்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கிட வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்தும், வீடு கட்டியும் வாழ்ந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என்றனர். இந்த போராட்டத்தில், கூட்டமைப்பை சேர்ந்த சீனிவாசன், விக்டர் விஜயன், ஜூடோமாதேஷ், கோவிந்தராஜ், முருகன், டேனியல்சங்கர், பிரபா, பெருமாள் மற்றும் பலனம்பட்டி, வெப்பாலம்பட்டி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, சின்னகரடியூர், பெரியகரடியூர், என்.தட்டக்கல், பாரூர், கீழ்குப்பம், ஜம்புகுட்டப்பட்டி, கோணானூர், வீரமலை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள், முதியவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் டி.யு.சி.ஐ. மாநிலக்குழு நாராயணராவ் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை, வருவாய் கோட்டாட்சியரிடம் நிர்வாகிகள் வழங்கினர்.

Related Tags :
Next Story