12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ப. அருள்ஜோஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மு. நடராஜன் வரவேற்று பேசினார்.
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை 1-1-2016 முதல் ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு அனைத்து தரப்பு ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய நிலுவை தொகையினை வழங்கவேண்டும், மத்திய அரசு இனியும் கால தாமதம் செய்யாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் உடனடியான அமைத்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திடவேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், ஓய்வு பெற்ற காவல் துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் துரைசாமி, நில அளவை துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் குமாரவேல் உள்பட நிர்வாகிகள் பேசினார்கள். முடிவில் மாவட்ட துணை தலைவர் ஆர்தர்காட்வின் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story