ஆறுகளின் கரையோரங்களில் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு மரக்கன்றுகள் நட திட்டம் கலெக்டர் தகவல்
கரூர் மாவட்டத்தில் ஆறுகளின் கரையோரங்களில் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
கரூர்,
கரூர் மாவட்ட வனத்துறை சார்பில் உலக வன நாள் நிகழ்ச்சி கரூர் அருகே ஒரு கல்லூரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் அன்பு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை உள்பட என அனைத்து வகையான சாலையோரங்களில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மரக்கன்றுகள் நட அரசு திட்டமிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அமராவதி, காவிரி, குடகனாறு, நங்காஞ்சி ஆறு உள்ளிட்ட ஆறுகளின் கரையோரம் ஒரு பகுதி 250 கிலோ மீட்டர் ஆகும். இரு புறம் கரையோரங்களில் மொத்தம் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விதைகள் மூலம் மரக்கன்றுகள் தயாரித்து மழைக்காலம் தொடங்கும் முன்பே மரக்கன்றுகள் நடப்படும்.
கரூர் மாவட்டத்தில் 2.3 சதவீதம் மட்டும் தான் வனப்பகுதி உள்ளது. மரக்கன்றுகள் நடுவதன் மூலம் மேலும் ஒரு சதவீதம் வனப்பகுதி அதிகரிக்கும். இதன்மூலம் வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் ரோட்டரி சங்கங்கள் மூலம் ஏற்கனவே 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மேலும் பள்ளி, கல்லூரி உள்பட பல்வேறு இடங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம் உள்ளது. வனம் ஒரு முக்கியமானது. வனங்களை பாதுகாப்பது நமது கடமையாகும். வனப்பகுதியில் தீப்பிடிக்காமல், சுகாதார கேடு ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மரக்கன்றுகள் நடுவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஸ், கல்லூரி செயலாளர் யத்தீஸ்வரி நீலகண்ட பிரியா, கல்லூரி முதல்வர் மணிகேமலை மற்றும் மாணவ-மாணவிகள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு வரவேற்று பேசினார். முடிவில் வனச்சரகர் நடராஜன் நன்றி கூறினர்.
நிகழ்ச்சியையொட்டி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் அன்பழகன் நட்டார்.

Related Tags :
Next Story