பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வங்கியில் மாற்றிய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள், போலீசார் விசாரணை
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ராமநாதபுரம் வங்கியில் மாற்றிய ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் புதிய நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ராமநாதபுரம்,
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாயை கொடுத்துவிட்டு புதிய ரூபாய் நோட்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை முந்திக்கொண்டு மாற்றி வந்தனர்.
இதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. இவ்வாறு ராமநாதபுரத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் பொதுமக்கள் கொடுத்த 500,1000 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இந்த ரூபாய் நோட்டு களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் சில ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து அனுப்பிய 1000 ரூபாய் நோட்டு களில் 5 கள்ளநோட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ரவீந்திரன் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனாவிடம் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்த கள்ளநோட்டு கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது புதிய நோட்டுக்களாக மாற்றப்பட்டதா அல்லது திட்டமிட்டே கள்ளநோட்டுகளை நல்ல நோட்டுகளாக சமூக விரோதிகள் மாற்றினார்களா என்பது தெரியவில்லை. இந்த நோட்டுகளை மாற்றி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது என்பதாலும், நோட்டுகளை மாற்றியவர்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லாததாலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியாமல் உள்ளது.

Related Tags :
Next Story