கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் படுத்து கிடந்த மலைப்பாம்பு
கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு படுத்து கிடந்தது. இதை கண்ட தோட்ட தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் காலை முதல் மாலை வரை நன்கு வெயிலும், அதன் பின்னர் பரவலாக சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் விஷ பாம்புகள் உள்ளிட்ட சிறுவன உயிரினங்கள் குடியிருப்புகளை நோக்கி வருகிறது.
இந்த நிலையில் கூடலூர் தாலுகா பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2 ஆமைக்குளம் பகுதியில் நேற்று காலை 10 மணிக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் பச்சை தேயிலையை பறித்து கொண்டிருந்தனர். அப்போது செடிகளுக்கு இடையே வளர்ந்து இருந்த புதர்களில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடப்பதை தோட்ட தொழிலாளர்கள் கண்டனர். பின்னர் பயத்தில் அலறி அடித்தவாறு ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தேவாலா வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வன காவலர் தேவா உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதுவரை பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடாமல் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறினர். பின்னர் வனத்துறையினர் தேயிலை செடிகளுக்கு இடையே சென்று பார்வையிட்டனர். அப்போது இரையை பிடிப்பதற்காக சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று புதர்களுக்கு இடையே மறைந்து இருப்பதை கண்டனர்.
இந்த சமயத்தில் சத்தம் கேட்டு மலைப்பாம்பு அங்கிருந்து வேகமாக சென்றது. இதையடுத்து, அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு தோட்ட தொழிலாளர்கள் தங்களது வேலையை தொடர்ந்தனர்.

Related Tags :
Next Story