நீலகிரி வனப்பகுதிகளில் உள்ள களைச்செடிகளை அகற்ற நடவடிக்கை
நீலகிரி வனப்பகுதிகளில் உள்ள களைச்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழல் சங்கம் சார்பில், உலக வன நாளையொட்டி புல்வெளிகளை வளர விடாமல் தடுக்கும் களைச்செடிகளை வெட்டி அகற்றும் பணி ஊட்டி ஹில்பங்க்-தமிழகம் சாலையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு களைச்செடிகளை அரிவாள் மூலம் வெட்டி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த 1994-ம் ஆண்டு கட்டப்பட்ட தடுப்பணையை ஆக்கிரமித்து இருந்த களைச்செடிகளை தன்னார்வலர்கள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி வடக்கு வனக்கோட்டத்துக்குட்பட்ட அப்பகுதியில், செஸ்ட்ரம் என்ற களைச்செடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளது. இந்த களைச்செடிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைள் உள்ளன. வனப்பகுதிகளின் வளத்தை கெடுக்கும் இந்த களைச்செடிகளால் புற்கள் ஏதும் முளைக்காமல் போய் விடுகிறது. இவை ஒரு மாதத்திலேயே 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. 13 அடி உயரத்துக்கு மேல் வளரும். இவை படர்ந்து அடர்ந்து வளர்வதால் மற்ற மரங்களின் மீது படர்கிறது. எதற்கும் பயன்படாத இந்த களைச்செடிகளால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதன் ஒரு பகுதியாக வனப்பகுதிகளை வளமாக்க களைச்செடிகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும் போது, நீலகிரி மாவட்டத்தில் 56 சதவீத வனப்பகுதிகள் உள்ளன. வனப்பகுதிகளில் பயனற்ற களைச்செடிகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. மேலும் வனத்துறை சார்பாக நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் உள்ள களைச்செடிகளை அகற்ற தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தமிழக அரசின் அனுமதி வந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும். வனப்பகுதிகளை பாதுகாக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்றார்.
இதில் நீலகிரி வனக்கோட்ட அதிகாரிகள் கலாநிதி (வடக்கு), ராஜ்குமார் (தெற்கு) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story