டெல்லியில் இருந்து சென்னை வந்த ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் குளிர்சாதன பெட்டியில் துப்பாக்கி குண்டுகள் கிடந்தன, போலீஸ் விசாரணை
டெல்லியில் இருந்து சென்டிரலுக்கு வந்த ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரெயிலின் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் 6 கைத்துப்பாக்கி குண்டுகள் அனாதையாக கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
சென்னை,
சென்னைக்கு கடந்த 19-ந்தேதி மாலை 5.50 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று காலை 6.20 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
பயணிகள் அனைவரும் இறங்கியபின் பேசின்பிரிட்ஜ் ரெயில்வே பணிமனைக்கு இந்த ரெயில் கொண்டு செல்லப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடந்தது. ரெயிலின் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியை (எச்.ஏ.-1) சுத்தப்படுத்தும் பணியில் 3 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். ஏ.சி. சரிபார்ப்பு பணியை மேற்கொள்வதற்காக அருண்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார்.
கைத்துப்பாக்கி குண்டுகள்
அப்போது குளிர்சாதன பெட்டியின் ‘பி’ பிரிவில் கருப்பு நிறத்தில் இரும்பு போன்ற ஒரு பொருள் கிடப்பதை அருண்குமார் பார்த்தார். அதை கையில் எடுத்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அவர் கையில் வைத்திருந்தது பிஸ்டல் மேகசின் ஆகும். அதாவது கைத்துப்பாக்கியின் குண்டு நிரப்பும் பிரிவு. அதில் 6 குண்டுகளும் இருந்தன.
அந்த துப்பாக்கி குண்டுகளை சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.தாமஸ் ஜேசுதாசனிடம் அருண்குமார் ஒப்படைத்து, நடந்த விவரங்களை கூறினார். இதையடுத்து ரெயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
போலீசார் விசாரணை
இதனைத்தொடர்ந்து சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். பொதுவாக பாதுகாப்பு காரணமாக முறையான உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்போர் தவறுதலாக தவறவிட்டுள்ளனரா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்கலாமா? எனும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரெயிலில் துப்பாக்கி குண்டு கிடந்த குளிர்சாதன பெட்டியில் பயணித்தோரின் பட்டியலை போலீசார் சேகரிக்க தொடங்கியுள்ளனர். இதில் மத்திய பிரதேச மாநில அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை மந்திரி நாராயணன் சிங் குஷ்வா பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் கூறியதாவது:-
மந்திரி கொண்டு வந்தாரா?
துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்ட ரெயில் பெட்டியில் டெல்லியில் இருந்து குவாலியர் நோக்கி மத்திய பிரதேச மந்திரி நாராயணன் சிங் குஷ்வா பயணித்து உள்ளார். அவரது பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட கைத்துப்பாக்கியாக இருக்கலாம். அதேவேளையில் அந்த பெட்டியில் சில ராணுவ வீரர்களும் பயணித்ததாக கூறப்படுகிறது.
எனவே அனைவரையும் விசாரித்து இந்த துப்பாக்கி குண்டுகள் யாருடையது? என்பதை கண்டுபிடிப்போம். இதற்காக பிறமாநில ரெயில்வே போலீசாரின் உதவியையும் நாடியிருக்கிறோம். இந்த துப்பாக்கி குண்டு ‘7.65 எம்.எம்’ வகையை சேர்ந்தது. குண்டு நிரப்பும் மேகசின் கீழே ‘ CAL32, CO-LT ’ என்று அச்சிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story