வேலை கிடைக்காத விரக்தியில் பெயிண்டர் தற்கொலை
வேலை கிடைக்காத விரக்தியில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
சோழிங்கநல்லூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ராஜா (வயது 40). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜா தினந்தோறும் வேலைக்கு செல்லாமல் தன்னுடைய மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மனைவி செல்வி வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார்.
சம்பவத்தன்று ராஜாவின் மனைவி செல்வி வீட்டுவேலைக்கு சென்று விட்டார்.
மனைவி வேலைக்கு செல்கிறார், தனக்கு வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் மது குடித்து விட்டு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story