7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு சட்டசபை சபாநாயகருக்கு அவசர நோட்டீஸ் - ஐகோர்ட்டு உத்தரவு
சட்டசபை சபாநாயகருக்கு அவசர நோட்டீஸ் அனுப்பும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பெங்களூரு,
7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) பதிலளிக்கும் படி சட்டசபை சபாநாயகருக்கு அவசர நோட்டீஸ் அனுப்பும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியான 4 இடங்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் வேட்பாளராக பாரூக் நிறுத்தப்பட்டார். அவருக்கு கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை மீறி ஜமீர்அகமதுகான் உள்பட 7 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தனர். இதையடுத்து ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் பாரூக் தோல்வி அடைந்தார். கொறடா உத்தரவை மீறிய 7 எம்.எல்.ஏ.க்களையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யுமாறு சட்டசபை சபாநாயகரிடம் ஜனதா தளம்(எஸ்) மனு கொடுத்து உள்ளது.
அந்த மனு மீது நடைபெற்று வந்த விசாரணை கடந்த 19-ந் தேதி முடிவடைந்தது. இந்த வழக்கில் தீர்ப்பை சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உள்ளார். இந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியாகும் 4 இடங்களுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் அந்த 7 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கில் தீர்ப்பை அறிவிக்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஜனதா தளம்(எஸ்) மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது ஐகோர்ட்டில் நேற்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்றது. 7 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரவிவர்மா குமார், “தேர்தல் முடிந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜனதா தளம்(எஸ்) ‘ரிட்‘ மனு தாக்கல் செய்து உள்ளது. இது விசாரணைக்கு ஏற்ற மனு கிடையாது. எனவே அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்“ என்றார்.
ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் உதய்ஹொல்லா, “கட்சி மாறி வாக்களித்த 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு கொடுத்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அதன் மீது சபாநாயகர் முடிவை அறிவிக்கவில்லை. விரைவாக தீர்ப்பை வழங்குமாறு கேட்க மனுதாரருக்கு உரிமை உள்ளது. டெல்லி மேல்-சபை தேர்தல் 23-ந் தேதி(நாளை) நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தீர்ப்பை அறிவிக்குமாறு சபாநாயகருக்கு இந்த கோர்ட்டு உத்தரவிட வேண்டும்“ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் அலசி ஆராய்ந்த ஐகோர்ட்டு, விளக்கம் கேட்டு சபாநாயகருக்கு அவசர நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டது. கோர்ட்டு ஊழியர் மூலம் நேரடியாக நோட்டீஸ் வழங்கி, நாளையே (அதாவது இன்று) சபாநாயகர் தனது வக்கீல் மூலம் பதிலளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Related Tags :
Next Story