7 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம் கோர்ட்டின் அதிகார வரம்புக்குள் வராது : சபாநாயகர் கே.பி.கோலிவாட்
ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம் கோர்ட்டின் அதிகார வரம்புக்குள் வராது என்று சபாநாயகர் கே.பி.கோலிவாட் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியான 4 இடங்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் செலுவராயசாமி, ஜமீர்அகமதுகான், பீமாநாயக், ரமேஷ் பன்டிசித்தேகவுடா, இக்பால் அன்சாரி, அகண்ட சீனிவாசமூர்த்தி, பாலகிருஷ்ணா ஆகிய 7 பேரும் கொறடா உத்தரவை மீறி காங்கிரசுக்கு வாக்களித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் ஜனதா தளம்(எஸ்) மனு கொடுத்தது.
அதன் மீது சபாநாயகர் விசாரணையை நடத்தி முடித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார். இந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியாகும் 4 இடங்களுக்கு 23-ந் தேதி (அதாவது நாளை) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே 7 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் தனது முடிவை டெல்லி மேல்-சபை தேர்தலுக்கு முன்பு வெளியிட உத்தரவிடக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஜனதா தளம்(எஸ்) மனு தாக்கல் செய்து உள்ளது. அதன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபாநாயகர் கே.பி.கோலிவாட்டுடன் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் சபாநாயகர் கே.பி.கோலிவாட் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு மீது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளேன். தீர்ப்பை வழங்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. இந்த தீர்ப்பை எப்போது வேண்டுமானாலும் வழங்கலாம். இதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் இல்லை.
நான் அரசியல் சாசனப்படி, சட்டப்படி பணியாற்றுகிறேன். இந்த விவகாரம் கோர்ட்டின் அதிகார வரம்புக்குள் வராது. இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக ஐகோாட்டில் இருந்து எனக்கு வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ எந்த உத்தரவும் வரவில்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் கேட்ட உடனேயே தீர்ப்பை வழங்க முடியாது. ஜனதா தளம்(எஸ்) கட்சி கூறிய கருத்துகளில் குழப்பம் உள்ளது என கே.பி.கோலிவாட் கூறினார்.

Related Tags :
Next Story