அலுவலகத்துக்கு ‘ஹை ஹீல்ஸ்’ அணிந்து செல்லும் ஆண்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண் ஒருவர், தனது அலுவலகத்துக்கு ஓராண்டு காலமாக ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் குதிகால் உயர்ந்த காலணிகளை அணிந்து சென்றுவருகிறார்.
ஆஸ்லி மேக்ஸ்வெல் லாம் என்ற அவர், சிட்னியைச் சேர்ந்தவர். பிரபல பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் இவர், கடந்த ஓராண்டாக தனது அலுவலகத்துக்கு 6 இஞ்ச் ஹை ஹீல்ஸை அணிந்துசெல்கிறார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டால், “இதைப் பற்றி வெட்கப்படவோ, ரகசியமாக மறைக்கவோ வேண்டிய அவசியமில்லை. ஒருநாள் நான் அவசரமாக அலுவலகத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது என்னுடைய ஷூவை காணவில்லை. வேறு வழியில்லாமல் நான் என்னுடைய தங்கையின் ஹை ஹீல்சை அணிந்துசென்றேன். ரோட்டில் நான் நடந்து சென்றபோது என்னை அனைவரும் வித்தியாசமாகப் பார்த்தனர். நான் அவர்களைக் கடந்து சென்றபோதும், அவர்கள் என்னை திரும்பித் திரும்பிப் பார்த்தனர். அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது, அதன் காரணமாகவே தொடர்ந்து ஹை ஹீல்சை அணிய ஆரம்பித்தேன்” என்கிறார்.
மேக்ஸ்வெல்லின் ஆடை தயாரிப்பாளரும் ஷூவை விட உங்களுக்கு ஹீல்ஸ்தான் அழகாக இருக்கிறது என்று கூறினாராம். ஆக, அவர் தொடர்ந்து அலுவலகத்துக்கு ஹீல்ஸ் எனப்படும் குதிகால் உயர்ந்த காலணிகளையே அணிந்து சென்று வருகிறார்.
ஹை ஹீல்ஸ் காரணமாக மேக்ஸ்வெல் பிரபலமாகிவிட்டார். எந்த அளவுக்கு என்றால், உள்ளூர் தொலைக்காட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு இவரை பேட்டி எடுக்கும் அளவுக்கு!
Related Tags :
Next Story