நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி விழா: மாணவர்கள் குறிக்கோளுடன் படித்தால் வெற்றி அடையலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு


நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி விழா: மாணவர்கள் குறிக்கோளுடன் படித்தால் வெற்றி அடையலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
x
தினத்தந்தி 23 March 2018 3:00 AM IST (Updated: 22 March 2018 6:00 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் குறிக்கோளுடன் படித்தால் வெற்றி அடையலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

நெல்லை,

மாணவர்கள் குறிக்கோளுடன் படித்தால் வெற்றி அடையலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

கல்லூரி நாள் விழா

பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கல்லூரி நாள் விழா நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சாதனை படைத்த மாணவ–மாணவிகளுக்கு கேடயம் பரிசு வழங்கினார்.

அப்பேது அவர் பேசியதாவது:–

கல்லூரி காலங்களை உங்களால் மறக்க முடியாது. வேலைவாய்ப்பு, உயர்கல்வி, போட்டி தேர்வுகள் எழுதுவது மற்றும் குடும்ப பொருளாதாரம் குறித்து பல்வேறு சிந்தனைகள் உருவாகும். நெல்லை மாவட்டத்தில் அதிக அளவிலான பொறியியல் கல்லூரிகள் உள்ளன

விடா முயற்சியுடன்...

அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது கடினமாகவே உள்ளது. கல்லூரியில் படிக்கும் போது முதலாம் ஆண்டிலேயே நீங்கள், உங்களுக்கு என்று ஒரு குறிக்கோளை ஏற்படுத்தி விடா முயற்சியுடன் படித்தால் வெற்றி அடையலாம். தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். புத்தகத்தை படிப்பது மட்டுமின்றி மற்றவர்களுடன் நன்றாக பழகி, அவர்களது கவனத்தை ஈர்க்கும் வகையில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவ– மாணவிகள் அனைவரும் தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு, நல்ல வேலைவாய்ப்புகளை பெற்று, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில், அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ஐசக் சாலமன் ஜெபமணி, கல்லூரி மாணவர் சங்க தலைவர் ஸ்ரீதரன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story