இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்


இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
x
தினத்தந்தி 23 March 2018 2:00 AM IST (Updated: 22 March 2018 6:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்கள் பட்டியலை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டு உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்கள் பட்டியலை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

திட்ட முகாம்

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி தாலுகாவில் மாப்பிள்ளையூரணி கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கொற்கை கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் கடையனோடை கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் கருங்கடல் கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் சிவந்திபட்டி கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவில் எஸ்.குமாரகிரி கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவில் குமாரகிரி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் எப்போதும்வென்றான் கிராமத்திலும், கயத்தாறு தாலுகாவில் சிதம்பரம்பட்டி கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நடக்கிறது. இந்த முகாம்களுக்கு அந்தந்த தாலுகா தாசில்தார்கள் தலைமை தாங்குகிறார்கள்.

கோரிக்கை மனு

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு– இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு கொடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story