காடுகளை பாதுகாக்க மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும் புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் வேண்டுகோள்
காடுகளை பாதுகாக்க மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும் என களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
களக்காடு,

உலக வனநாள் விழா
களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் களக்காடு புலிகள் காப்பகத்தின் சார்பில், உலக வனநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:–
களக்காடு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மலையடிவார கிராமங்களில் குமரி முதல் குமுளி வரை 283 வனக்குழுக்கள் உள்ளது. தமிழகத்திலேயே மிக அதிகளவிலான வனக்குழுக்களை கொண்ட புலிகள் காப்பகம், களக்காடு புலிகள் காப்பகம் ஆகும். வனக்குழுக்களால் வனக்குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. வனக்குழுக்களுக்கு அரசும் நிதி உதவி வழங்கி வருகிறது. தற்போது ரூ.30 கோடி நிதி உள்ளது. களக்காடு வனப்பகுதியை தேசிய புலிகள் ஆணையம் தத்தெடுத்து நிதி வழங்கி வருகிறது.
மரம் வளர்க்க வேண்டும்
வனப்பகுதி செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வனப்பகுதியில் இருந்து 1 கி.மீ. தூரத்திற்கு பட்டா நிலங்களில் இருந்தாலும் மரங்கள் வெட்டக்கூடாது, கோழிப்பண்ணைகள், தொழிற்சாலைகள் தொடங்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் தற்போது வனப்பகுதி குறைந்து வருகிறது. நமது பகுதியில் மக்கள் ஒத்துழைப்புடன் வனப்பகுதி செழிப்பாக உள்ளது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் மரம் வளர்க்கவும், காடுகளை பாதுகாக்கவும் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். அதனைதொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியை செலின் கமலம், ஆசிரியர்கள் ஆண்ட்ரூ நிக்சன், மோகன்குமார், திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் புகழேந்தி, வனக்காப்பாளர் முத்துசெல்வன் மற்றும் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story