பஸ் வசதி கோரி மாணவ, மாணவிகள் சாலை மறியல்


பஸ் வசதி கோரி  மாணவ, மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 March 2018 3:30 AM IST (Updated: 22 March 2018 10:44 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே பஸ் வசதி கோரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் பேச்சு வார்த் தையால் அவர்கள் சமரசம் அடைந்தனர்.

போடி,

போடி தாலுகா போலீஸ் சரகத்தில் மீனாட்சிபுரம், பொட்டல்களம், மீ.விலக்கு, அணைக்கரைப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த ஏராள மான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் விலக்கு பகுதி யில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறிச்செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பொட்டல் களம் கிராமத்துக்கு புதிதாக தார்சாலை அமைக்கப் பட்டுள்ளது என்றும், இதனால் அரசு பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என்றும் கோரி அந்த பகுதி மாணவ, மாண விகள் நேற்று மீனாட்சிபுரம் விலக்கு பஸ் நிறுத்தத்தில் தடுப்பு கம்பிகளை போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை அப்புறப்படுத் தினார்கள். அப்போது குரங் கணி தீ விபத்து குறித்து ஆய்வுக்கு சென்ற கலெக்டர் பல்லவி பல்தேவ் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

உடனே அவர் காரில் இருந்து இறங்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கூறும்போது, எங்கள் பகுதிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பஸ் வந்து சென்றது. பின்னர் ரோடு சரியில்லை என்று நிறுத்தி விட்டார்கள். தற் போது புதிதாக சாலை அமைக் கப்பட்டுள்ளது.

ஆனால் இதன் பின்னரும் அரசு பஸ்கள் வருவதில்லை. இதனை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரி வித்தனர். மேலும் பொட்டல் களம் கிராமத்துக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அரசு பஸ் வந்து செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்த சென்றனர்.

Next Story