கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ.4 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்


கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ.4 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 March 2018 10:45 PM GMT (Updated: 22 March 2018 5:27 PM GMT)

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ.4 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே அரசுக்கு சொந்தமான பழத்தோட்டம் உள்ளது. இந்த தோட்டம் 1922–ம் ஆண்டு திருவிதாங்கூர் ஸ்ரீமூலம் மகாராஜாவால் தொடங்கப்பட்டது. 31.64 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மா, நெல்லி, சப்போட்டா உள்பட பல வகையான மரங்களும் உள்ளன. மேலும் பழ மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அரசு பழத்தோட்டத்தில் ரூ.4 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11–ந் தேதி தொடங்கியது. பூங்காவின் நுழைவாயிலில் பழைய திருவிதாங்கூர் மன்னர் காலத்து அரண்மனையின் முகப்பு வாயில் போன்று வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.

மேலும் பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மூங்கில் பண்ணை, மூலிகைப்பண்ணை, நீர்வீழ்ச்சி, அருவி, தெப்பக்குளம், உணவு விடுதி, கார் பார்க்கிங் வசதி  உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்படும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்கான பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.

Next Story